தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாறைப்பட்டி புதூர் பகுதியில் லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் அருணகிரி. இவர் மது குடித்துவிட்டு பொதுமக்களுடன் சண்டை போடுவது, இரவு நேரங்களில் தூங்காமல் வீட்டின் கதவுகளை தட்டுவது, பெண்கள் குளிக்கும் போது பாத்ரூமுக்குள் நுழைவது என தொடர்ந்து அராஜகம் செய்து பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அப்போது மனநலம் பாதித்தது போல நடித்து ஏமாற்றி அருணகிரி ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அருணகிரி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கேஸ் சிலிண்டரை திருடி அந்த பணத்தில் மது குடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் அவரை கட்டிவைத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசும், மருத்துவ உதவியாளர்களும் வந்து ஆம்புலன்ஸ் மூலம் அருணகிதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.