மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு லக்பதி திதி யோஜனா என்ற திட்டத்தை பெண்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திறன் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் செய்யும் திறன் வளர்க்கப்படுகின்றது. இந்த திட்டம் மூலமாக தங்களை பொருளாதார ரீதியாக வலிமையாக்கி கொள்வதற்காக கடன் உதவியும் வழங்கப்படுகிறது. 18 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை கடனுதவி பெறலாம்.

தற்போது வரை சுமார் ஒரு கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். ஆதார் கார்டு, பான் கார்டு, வருமானச் சான்று, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மொபைல் எண் போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்தில் பெண்கள் பயனடையலாம். பெண்கள் தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கும் இந்த திட்டத்தின் மூலம் பெண்களின் வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. மேலும் குறைந்த செலவில் காப்பீட்டு வசதியும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.