இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல பல்வேறு மாநிலங்களிலும் இலவசமாகவே ஸ்மார்ட் போன்  வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மாநில முதல்வர் அசோக் கெலாட் தேர்தலுக்கு முன்பாக இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டம் பெண்களுக்கு மட்டுமே பயன் கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்டது.

இதற்காக இந்திரா காந்தி இலவச ஸ்மார்ட்போன் திட்டம் 2023 என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் அந்த மாநிலத்தில் வசிக்கும் பெண்களுக்கு இணைய வசதி மற்றும் குரல் அழைப்பு சேவைகளோடு இலவச செல்போன்களை வழங்குவதே ஆகும். இதற்கு அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பெண் மாணவர்களுக்கு இந்த திட்டம் கீழ் பயனடையலாம். உயர் கல்வி கல்லூரியில் சேர்ந்த பெண்களுக்கும் கிடைக்கும்.

மேலும் மாநிலத்தில் அரசு ஓய்வூதியம் பெறும் விதவைகள் அல்லது தனித்து வாழும் பெண்களுக்கும் கிடைக்கும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலையை முடித்த குடும்ப பெண்களும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்றவை தேவைப்படும். மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற https://rajasthan.gov.in/என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்