தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு தக்காளி விலை போட்டி போடுகிறது.

ஆனால் விரைவாசியை மத்திய அரசு கட்டுப்படுத்தவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தக்காளி விலை கேஸ் விலையை நெருங்கும் வரை மத்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. உணவுப் பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை மத்திய அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.