
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பூட்டிய வீட்டில் வயது முதிர்ந்த தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியை சேர்ந்த நாக சுப்ரமணியன் (75), தனலட்சுமி (70) தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
4 நாட்களாக வீடு பூட்டிக் கிடந்த நிலையில், மகள் வந்து பார்த்த போது அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் தம்பதியின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.