
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்கிறார்.
இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால் இன்னும் படத்தில் இறுதி கட்ட பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலியாக இருப்பதால் அந்த தேதியில் நடிகர் விக்ரம் நடிக்கும் தங்கலான் படம் ரிலீஸ் ஆகலாம் என்ற லேட்டஸ்ட் அப்டேட்டும் வெளியாகியுள்ளது.