ஐபிஎல் சீசனின் 11 வது லீக் போட்டியானது கவுகாத்தியில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ஆனது 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 81 ரன்களை குவித்தார். அதனை தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே 20 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 176 மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக ராஜஸ்தான் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ராஜஸ்தான் அணின் ஹசரங்கா நான்கு ஓவர்கள் வித்தியாசத்தில் 35 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டை வீழ்த்தினார். ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தியபோதும் அதை புஷ்பா பட பாணியில் ஹசரங்கா கொண்டாடினார். இந்த நிலையில் விக்கெட் வீழ்த்திய போது புஷ்பா  பட பாணியில் கொண்டாடியது ஏன் என்று இது குறித்து ஹசரங்கா கூறியுள்ளார். அதாவது, நான் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். அதனால் தான் சிறந்த வீரரான ருத்துராஜின் விக்கெட்டை நான் வீழ்த்திய போது புஷ்ப படப்பாடியில் கொண்டாடினேன் என்று கூறியுள்ளார்.