தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 10-ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகிறது.‌ நடிகர் அஜித் நடிகர் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அனோஷ்கா என்ற ஒரு மகளும் ஆத்விக் என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள்.

இதில் ஆத்விக் கால்பந்து போட்டியில் விளையாடி வரும் நிலையில் தற்போது ஸ்கூலில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்துள்ளான். இது தொடர்பான வீடியோவை நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அப்பாவை போலத்தான் மகனும் என்று பலவாறு கமெண்ட் செய்த வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,