தமிழ் சினிமா போல பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகை தான் ஹினா கான். இவர் தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ளார். இவர் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதன்படி சிகிச்சைக்காக தன்னுடைய நீண்ட கூந்தலை கட்டையாக வெட்டிக் கொள்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவில் ஹினா கானின் முடி வெட்டும் போது அவருடைய தாய் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சத்தம் போட்டு கதறி அழுகிறார்.

இதனைப் பார்த்த ஹினா கான் இது வெறும் முடி தான் என்று கூறி தனது தாயை ஆறுதல் படுத்துகிறார். மேலும் போதும், இப்படி அழுவது உங்கள் உடலுக்கு நல்லதில்லை என்று சொல்லும் காட்சியும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தான் நன்றாக இருப்பதாக அவர் கூறியுள்ள நிலையில் அவருக்கு இணையவாசிகள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@realhinakhan)