
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நேற்று நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்துவதற்கு நடிகர் தனுஷிடம் 2 வருடங்களாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அதற்கு தனுஷ் மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் நயன்தாரா குற்றச்சாட்டு தெரிவித்ததோடு வெறும் 3 வினாடி BTS காட்சிகளை பயன்படுத்தியதற்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்பதாகவும் தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு தெரிவித்ததோடு பழிவாங்கும் நோக்கத்தில் தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் கூறினார். அதோடு மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்தால் தனுஷுக்கு பொறுக்காது எனவும் கடந்த காலங்களில் உங்களுடன் பயணித்தவர்கள் வெற்றி பெற்றால் அதை நினைத்து பெருமைப்படுங்கள் என்றும் கடவுள் உங்களுக்கு அந்த நல்ல மனசை இனியாவது கொடுக்கட்டும் என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷின் வழக்கறிஞர் அருண் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதோடு நயன்தாராவின் குற்றசாட்டுக்கு தனுஷ் விரைவில் பதில் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நானும் ரவுடிதான் திரைப்படத்தை தனுஷ் தயாரித்த நிலையில் அந்த படம் சொன்ன தேதியில் முடிவடையாமல் நாட்கள் இழுத்து சென்றதாகவும் சொன்ன பட்ஜெட்டை விட 10 கோடி ரூபாய் வரை அதிகமாக செலவானதாகவும் கூறப்படும் நிலையில் தனுஷ் அதனால் தான் பாடலை பயன்படுத்தினால் காப்பிரைட்ஸ் உரிமை கேட்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.