2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் திருப்பதிக்கு அழைத்துச் செல்ல ஐ ஆர் சி டி சி மிக அருமையான டூர் பேக்கேஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மகாவிஷ்ணுவின் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்யும் நிலையில் புத்தாண்டின் போது ஐ ஆர் சி டி சி டூர் பேக்கேஜை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த டூர் பேக்கேஜிங் பெயர் பெங்களூரு திருப்பதி பாலாஜி தர்ஷன். இதன் கீழ் மொத்தம் ஒரு இரவு மற்றும் இரண்டு பகல் பயணம் செய்யலாம். இந்த டூர் பேக்கேஜ் பெங்களூரில் இருந்து ஜனவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் பயணம் இதில் பேருந்தில் மேற்கொள்ளப்படும். மல்டி ஆக்சில் ஏசி பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயணிக்கும் போது வழிகாட்டி வசதியும் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் தரிசன டிக்கெட் வழங்கப்படும். இதற்காக நீங்கள் தனியாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. நீங்கள் திருமலை திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

மேலும் நீங்கள் தங்குவதற்கு ஹோட்டல் ஏற்பாடுகளும் செய்து தரப்படும். இதற்கான கட்டணம் வெறும் 1930 மட்டுமே. மேலும் பேருந்தில் உங்கள் இருக்கையை முன்பதிவு செய்ய நீங்கள் ஐ ஆர் சி டி சி இணையதளத்திற்கு https://www.irctctourism.com/ சென்று முகப்பு பக்கத்தில் டூர் பேக்கேஜ்கள் என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் திருப்பதி பாலாஜி தரிசனம் லிங்கை கிளிக் செய்து அனைத்து பேக்கேஜ் விவரங்களும் சரிபார்த்து உள்நுழைந்து முன்பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அருகில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று உங்கள் இருக்கையை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.