இந்தியாவில் தனி நபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு புதிய வருமான வரி முறை மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. வருமான வரி செலுத்துபவர்கள் இரண்டு வரிமுறையில் அவர்களுக்கு ஏற்ற வழிமுறையை தேர்வு செய்ய முடியும். தேர்வு செய்யாத நபர்களுக்கு 2023 ஆம் ஆண்டில் புதிய வழிமுறைக்கு மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்யும் சம்பளத்தாரர்கள், தனிநபர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் என்ற நிலையான வரி விலக்கையும் தேசிய ஓய்வூதிய முறை பிரிவு 80CCD இன் கீழ் வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான போக்குவரத்து கொடுப்பனவுகளுக்கான விலக்கு, ட்ராவல் அலவன்ஸ், பயணம், சுற்றுப்பயணம் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான இழப்பீடுகள் விருப்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ், கடன் வாங்கிய சொத்துக்களுக்கான வீட்டு கடன்களுக்கு பிரிவு 24 இன் கீழ், விடுப்பு பயணத்திற்காக பெறப்பட்ட தொகைக்கு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கணக்குகளுக்கு முதலாளி பங்களிப்புகளுக்கு, விடுப்பு பயணத்திற்காக பெறப்பட்ட தொகைக்கு என இவற்றிற்கெல்லாம் வரி விலக்கு அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.