சிவசேனா கல்யாணின் தலைவர் மகேஷ் கெய்க்வாட்டை துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ் நகரில் உள்ள ஹில் லைன் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) கல்யாணின் தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் –  ஏக்நாத் சிண்டே பிரிவு சிவசேனா முன்னாள் கவுன்சிலர் மகேஷ் இடையே பிரச்சனை இருந்தது. மகாராஷ்டிரா முதலமைச்சர் சிண்டே கட்சி நிர்வாகியை கூட்டணி கட்சியான பாஜக எம்எல்ஏ சுட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்ட முன்னாள் கவுன்சிலரின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உல்ஹாஸ் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அறைக்குள் நடந்த பேச்சின் போதே பாஜக எம்எல்ஏ துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. கெய்க்வாட் மற்றும் ஒரு ஆதரவாளர் ஐந்து தோட்டாக்களால் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்தில் மூத்த இன்ஸ்பெக்டர் அனில் ஜக்தாப் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் மற்றும் நகர தலைவர் மகேஷ் கெய்க்வாட் இடையே நடந்த உரையாடலின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவத்தில் கல்யாணின் சிவசேனா தலைவர் படுகாயமடைந்து தானே ஜூபிடர் மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். பாஜக எம்எல்ஏ சுட்டதில் படுகாயம் அடைந்த முன்னாள் கவுன்சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மகேஷ் கெய்க்வாட் மற்றும் கண்பத் கெய்க்வாட் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு, புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, ​​அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, மகேஷ் கெய்க்வாட் மற்றும் அவரது நபர்களை நோக்கி கண்பத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டார். இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது” என்று டிசிபி சுதாகர் பதரே கூறினார்.

இந்நிலையில் துப்பாக்கியால் சுட்ட பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ கண்பத் கெய்க்வாட் மருத்துவ பரிசோதனைக்காக காவல் நிலையத்திற்கு வெளியே அழைத்து வரப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இந்த சம்பவம் தொடர்பாக கைக்வாட் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிசிபி சுதாகர் பதரே கூறுகையில், “ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மூவரைத் தேடுதல் நடந்து வருகிறது. ஐபிசி மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகள் எப்ஐஆரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.”