
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதே சமயம் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிகம்.
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி பல்வேறு வைப்பு நிதி திட்டங்களை கொண்டுள்ளது. அதன்படி 444 நாட்களுக்கான புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் உங்கள் பணத்தை 444 நாட்களுக்கு டெபாசிட் செய்தால் 7.25 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டம் எஸ்பிஐ வங்கியின் மற்ற வைப்பு தொகை திட்டங்களை விட அதிகபட்ச வட்டி விகிதம் கொண்டதாகும்.