
Diamonds Are Forever, Chinatown உள்ளிட்ட பல பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தும், பிராட்வே மேடைகளில் பெட்டை டேவிஸ், ஆன் பான்கிராஃப்ட் போன்ற நடிகர்களுடன் நடித்தும் புகழ்பெற்ற நடிகர் ப்ரூஸ் ஹெர்பர்ட் க்ளோவர், 92 வயதில் மரணமடைந்தார். இந்த தகவலை அவரது மகன் மற்றும் Back to the Future நடிகர் க்ரிஸ்பின் க்ளோவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். கடந்த 1932ம் ஆண்டு மே 2ஆம் தேதி, அமெரிக்காவின் சிக்காகோவில் பிறந்த க்ளோவர், கலை மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டிருந்தவர்.
கொரியப் போர் காரணமாக அவரது நடிகரான கனவு தாமதமானாலும், பின்னர் பிராட்வே மேடைகளிலும், Perry Mason, Mission: Impossible, Battlestar Galactica போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும், Ghost World, The Thomas Crowne Affair போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1971ல் வெளியான ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Diamonds Are Forever-இல், Mr. Wint எனும் வில்லன் வேடத்தில் அவர் செய்த நடிப்பு இன்று வரைக்கும் பேசப்படுகிறது. நடிகையான தனது மனைவி பெட்டியுடனும், மகன் க்ரிஸ்பினுடன் சேர்ந்து 2007ல் It Is Fine! Everything Is Fine. எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவருடைய மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.