
மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளாக வழங்குகிறது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்த பணத்தை பெறுவதற்கு இகேஒய்சி அப்டேட்டை சரி பார்ப்பது அவசியம்.
அதாவது பணம் சரியான நபர்களுக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்து கொள்ள இகேஒய்சி அப்டேட் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இகேஒய்சி அப்டேட்டை சரி பார்க்காத விவசாயிகளுக்கு பணம் கிடைக்காது. எனவே இந்த செயல்பாட்டை விவசாயிகள் முடிப்பது அவசியம்.
இந்த செயல்பாட்டினை பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரி பார்த்துக் கொள்ளலாம். அதன்படி பிஎம் கிசான் அதிகாரபூர்வ இணையதளத்திற்குள் சென்று பயனாளியின் நிலைப்பக்கத்தை அணுகி பயனாளி நிலை என்பதை கிளிக் செய்து ஆதார் எண் அல்லது கணக்கு எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் பிறகு தரவைப் பெறு என்பதை கிளிக் செய்து பயனாளியின் நிலையை சரிபார்த்து கட்டண நிலையை சரிபார்த்தல் வேண்டும்.
இதைத்தொடர்ந்து உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்கள் நிலை என்னவென்று காட்டப்படும். மேலும் இகேஒய்சி அப்டேட்டை சரி பார்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி என்பதால் அதற்குள் இந்த செயல்பாட்டினை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.