நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று 61வது லீக் தொடரில் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் மூலம் லக்னோவின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. ஏற்கனவே குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் இன்னும் ஒரு அணி மட்டுமே பிளே ஆப் செல்ல முடியும். மேலும் தற்போது லக்னோ அந்த வாய்ப்பை இழந்ததால் பிளே ஆப் வாய்ப்பை கைப்பற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும்.