முதல்முறையாக கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவை நிபுணர்கள் மதிப்பிட்டு உள்ளனர். அதாவது ஆஸ்திரேலிய தேசிய அறிவியல் நிறுவனம் மற்றும் டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்களின் சமீபத்திய ஆய்வில், பெருங்கடல்கள் பிளாஸ்டிக் நீர் தேக்கமாக மாறிவிட்டதாகவும் கடலில் 30 லட்சம் டன் முதல் 1.1 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் வெளியாகி தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.