தமிழகத்தில் சமீப காலமாகவே நாய்கள் கடித்து பலரும் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் நாய்கள் கடிப்பது குறித்த புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் சென்னை கேகே நகரில் பிளஸ் 2 படிக்கும் மாணவனை வளர்ப்பு நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற மாணவனை மோகன் என்பவரது நாய் கடித்ததில் மாணவனின் கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை துரைராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.