தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையை தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக ஆரோக்கிய விஜி என்ற பெண்ணுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்கள். இதில் மணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக விஜிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அது பெண் குழந்தை என்பதால் விஜிக்கு அந்த குழந்தையை பிடிக்கவில்லை.

அதோடு தன் கணவரும் சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வருவதால் குடும்பத்தின் நிதி நிலைமை மிகவும் சிக்கலாகிவிட்டது. ஒருபுறம் கணவனின் மருத்துவ சிகிச்சைக்காக பணம் செலவாகும் நிலையில் பெண் குழந்தை வளரும்போது செலவுகள் அதிகரிக்க கூடும் என்று விஜி எண்ணியுள்ளார். இதன் காரணமாக வீட்டின் குளியலறையில் உள்ள ஒரு தண்ணீர் பக்கெட்டில் தன்னுடைய குழந்தையை மூழ்கடித்து கொலை செய்து செய்துள்ளார். இதுகுறித்த தகவல் போலீசருக்கு கிடைத்த நிலையில் அவர்கள் விஜியை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து விஜியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.