தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியில் ஜகத் என்பவர் வசித்து வருகிறார். நேபாளத்தைச் சேர்ந்த இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் காவலாளியாக ஒரு வருடமாக வேலை செய்து அந்த பகுதியில் தன்னுடைய மனைவியுடன் தங்கி இருக்கிறார்.

இவருடைய மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 14 நாட்களுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 2 மணியளவில் தன்னுடைய 14 நாட்களான குழந்தையை ஜகத் வெளியே தூக்கி சென்று கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து பின்னர் உடலை ஒரு குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.

இது தொடர்பாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஜகத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.