தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது தன்னுடைய 44-வது படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதன் பிறகு ஜெயராம் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசையமைக்கும் நிலையில் இன்று நள்ளிரவில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த டீசர் வீடியோவை பார்க்கும் போது  படம் முழுக்க அதிரடி சண்டை காட்சிகளும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வீடியோ நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக இன்று வெளியிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.