பிரேசிலில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி சாவ் பாலோ மாகாணத்தில் நேற்று மிக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ள காடாக மாறியது. அதோடு சொரோகாபா நகரத்தில் உள்ள இரண்டு மருத்துவமனைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த கனமழைக்கு இடையே தாராவ்கா நகரத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் உருவாகியுள்ளது. 6.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 628 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானது என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மழை வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டு மூன்று பேர் உயிரிழந்த நிலையில் நிலநடுக்கமும் மக்களை அச்சுறுத்தியுள்ளது.