சோசியல் மீடியா தளங்களில் பல வித்தியாசமான அனுபவங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திவ்யா என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் முன்னாள் காதலன் அனுப்பிய மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவரது முன்னாள் காதலன் இப்போது நம் காதல் முடிந்து விட்டது.

நாம் காதலித்தபோது உங்களுக்கு அனுப்பிய சிற்றுண்டிகளுக்கான பணத்தை திரும்ப பெற விரும்புகிறேன் என கூறியுள்ளார். மேலும் இதுவரை தான் வாங்கி கொடுத்த பொருட்களின் விலை பட்டியல்களையும் அந்த நபர் அனுப்பியுள்ளார்.

அதில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட மளிகை பொருட்களும், சிப்ஸ் உள்ளிட்ட சிற்றுண்டிகள் இடம்பெற்றுள்ளது. அந்த பதிவிற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு பயனர் நான் அதிர்ஷ்டசாலி. முன்னாள் காதலர் பிரிந்த போது எனக்கு விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார் என கூறினார். மற்றொருவர் அவருக்கான பணத்தை திரும்ப கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்.