
சானியா மிர்சா மற்றும் ஷோயப் மாலிக் ஆகியோரின் மகனான இல்ஹான் மிர்சா மாலிக் தன்னுடைய முதல் நோன்பை வைத்துள்ளார். மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நோன்பு வைத்து ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய தாத்தா பாட்டி வீட்டில் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த சிறப்பான தருணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்கள் இந்த ஜோடி. தந்தை ஷோயப் மாலிக், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் நோன்பு முபாரக் என்னுடைய குழந்தைக்கு, பாபா உன்னை மிகுந்த நம்பிக்கையோடு பாராட்டுகிறேன், அல்லாவின் ஆசிர்வாதம் எப்போதும் உன்மேல் இருக்கட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல சானியா மிர்சாவும் தன்னுடைய மகனின் புகைப்படத்தை பகிர்ந்து அல்லாஹும் மா பாரிக் என்று பகிர்ந்துள்ளார். இந்த ஜோடி விவகாரத்தை பெற்றாலும் இவர்கள் இருவரும் இணைந்து தங்களுடைய மகனை வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷோயப் மாலிக் நடிகை சனா ஜாவெதுடன் திருமணமாகியுள்ளார், அதேசமயம் சானியா தனது வாழ்க்கையையும் தாய்மை பணிகளையும் கவனித்து வருகிறார்.