தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இவர் நடிப்பில்  வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”.

இவரின் 75வது படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கிவருகிறார். நடிகர் ஜெய், சத்யராஜ் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதனை தொடர்ந்து பிரபல யூடியூபர் டூட் விக்கி இயக்கும் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்தப் படத்தின் பட்டப்படிப்பு விரைவில் துவங்கவுள்ளது என்றும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.