புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் தணிகைத்தம்பி. இவர் பல பிரபலமான ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது உடல்நல குறைவினால் காலமானார்.

இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் பதிவில் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் மன்ற தலைவராகவும் இந்திய சமாதான ஒருமைப்பாட்டு குழு உறுப்பினராகவும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் காங்கிரஸ் மற்றும் காமராஜர் மீதும் மிகுந்த பற்றி கொண்டிருந்தார். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு அவரின் செயல்கள் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் பத்திரிகையாளர்கள் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.