கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜிபி ரவி காலமானார். இவர் பட்டணத்தில் பூதம், துருப்புகக்குளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு நடிகராக மட்டுமின்றி தொழில்துறையிலும் கவனம் செலுத்தி வந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர் வியாபார நோக்கத்தோடு சிங்கப்பூரில் பின்னர் குடியேறினார்.

இந்நிலையில் சின்னத்திரையிலும் நடித்து வந்த ரவி தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக மரணமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.