
பிரபல பஞ்சாபி பாடகர் சுரிந்தர் ஷிந்தா (64) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். ‘புட் ஜட்டன் தே’ உள்ளிட்ட பல பாடல்களை பாடி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த அவரது மறைவிற்கு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஷிந்தா மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்; பஞ்சாபின் குரல் மவுனமாகிவிட்டது என இரங்கல் தெரிவித்துள்ளார்.