ஒரியாவின் நட்சத்திர நடிகர் பிந்து நந்தா காலமானார். இவருக்கு வயது 45. பல ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். கல்லீரல் தானம் செய்பவர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவரது ரத்த பிரிவு ஒத்துப் போகாததால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் மறைவுக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் கதாநாயகனாகவும் வில்லனாகவும் குணசேத்திரக் கலைஞராகவும் பிரபலமாக இருந்தவர்.