வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவைக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவரது உடல்மொழிக்கும். உச்சரிப்புக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் பெரிய ரசிகர்கள். இவர் இல்லாத மீம்ஸ் டெம்ப்ளேட்டே கிடையாது.  இந்நிலையில் இவருக்கு மட்டுமின்றி  இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு பிப்ரவரி 28 ஆம் தேதியன்று  சர்வதேச ஊழல் தடுப்பு என்ற அமைப்பு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

ஆனால், வழங்கப்பட்ட அனைத்தும் போலியான பட்டங்கள் என பன்னர் தெரியவந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலை. போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.