கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சோபிதா சிவானா. இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாலேஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்த  நிலையில் கடந்த 2 வருடங்களாக அங்கு தங்கி இருந்த சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இவர் கன்னட சினிமாவில் ஜாக்பாட் மற்றும் ஏடிஎம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.