
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் நடித்த பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆகி வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருப்பவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கன்னட சினிமாவில் முதன்முறையாக அறிமுகமான நிலையில் விளம்பர நிகழ்ச்சிகளில் நடித்ததன் மூலம் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து பின்னர் தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவர் தன்னுடைய நீண்ட நாள் நண்பரான நவநீத் கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படங்களை நடிகை சாக்ஷி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram