
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காவியா மாதவன். இவர் தமிழ் சினிமாவில் என் மன வானில், காசி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப்பின் மனைவியாவார். இந்நிலையில் நடிகை காவியாவின் தந்தை பி மாதவன் (75) தற்போது உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்தார்.
அவர் சென்னையில் மரணம் அடைந்த நிலையில் அவரது இறுதி சடங்குகள் கொச்சியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாதவன் சுப்ரியா டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தினார். மேலும் இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.