தெலுங்கு சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஹலோ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். கல்யாணி பிரியதர்ஷினி. இவர் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷினி சீரியல் நடிகர் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது.

ஏற்கனவே அந்த சின்னத்திரை நடிகருக்கு திருமணம் ஆனதாகவும் கல்யாணி பிரியதர்ஷன் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் பட்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்போது அது வதந்தி என்று தெரியவந்துள்ளது. அதாவது ஒரு விளம்பத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். மேலும் இந்த வீடியோவை தான் அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறி பரப்பி வருகிறார்கள்.