தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாலா. இவர் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இவர் இன்று தன்னுடைய முறைப்பெண் கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.  நடிகர் பாலாவுக்கு 4-வது திருமணம் ஆகும். கடந்த 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை நடிகர் பாலா திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில் அடுத்ததாக மருத்துவரான எலிசபெத் என்பவரை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் எலிசபெத் மற்றும் பாலா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதற்கிடையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சந்தனா என்பவரையும் பாலா திருமணம் செய்ததாகவும் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இப்படி 3 திருமணங்கள் செய்தும் அவர் வாழ்க்கையில் அது நீடிக்காத நிலையில் தற்போது நான்காவது கோகிலா என்பவரை திருமணம் செய்துள்ளார். மேலும் இன்று உறவினர்கள் முன்னிலையில் அவருடைய திருமணம் எளிமையாக நடைபெற்ற நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.