பாலிவுட்டின் முன்னாள் நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் மகள்தான் திஷா. 21 வயதாகும் இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஜெர்மனியில் இன்று காலை காலமானார். கிரிஷன் குமார் டி – சீரிஸ் தலைவர் பூஷன் குமாரி நெருங்கிய உறவினர். திஷாவின் மரணத்தை டி சீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அறிவிப்பை டி சீரிஸ் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கிரிஷன் குமார் குடும்பத்திற்கு இது கடினமான நேரம். அவர்களின் தனி உரிமை மதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.