அமெரிக்காவை சேர்ந்த பிரபல டிவி நடிகர் அலெக் முஸ்ஸர் காலமானார். புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான All My Childrenல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அலெக். 1970 முதல் ஒளிபரப்பாகும் இத்தொடரில் 2005-2007 வரையிலான காலகட்டத்தில் அலெக் நடித்திருந்தார். இந்நிலையில், அலெக் நேற்று அவரது வீட்டில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை.