
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் சண்டை காட்சிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்த தேவன் குமார் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் வில்லனாக அறிமுகமான இவர் கைதி மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரை உலகில் உள்ள பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.