
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நேத்ரன். இவர் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் சீரியலில் நடித்து வருகின்றார். இவர் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் இவருடைய மூத்த மகள் அபிநயா கனா காணும் காலங்கள் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த நிலையில் அபிநயா தனது குடும்பத்துடன் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது அவர் ஒரு சோகமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், என்னுடைய அப்பாவுக்கு தற்போது உடல்நிலை சரியவில்லை, கடந்த சில வாரமாக அவரின் உடல்நிலை மோசமாக இருந்து வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிறைவடைந்த நிலையில் கல்லீரல் பாதிப்பு இருப்பதால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அபிநயா தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.