தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் டெலிபோன் சுப்ரமணி என அழைக்கப்பட்டார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவினால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது காலமானார். மேலும் இவருக்கு 67 வயது ஆகும் நிலையில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.