
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜிஷா விஜயன். இவர் தமிழ் சினிமாவில் ஜெய் பீம், நடிகர் தனுஷ் நடித்த கர்ணன், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ரெஜிஷா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் நடிகை ரெஜிஷா பிரபல ஒளிப்பதிவாளரான டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் நடிகை ரெஜிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
