பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தற்போது விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. இதனால் தற்போது திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் சாமி  தரிசனம் செய்ய வருவதால் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் நடைபெறும் சுப்ரபாத சேவையில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பக்தர்களை கூடுதலாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என்று தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இதே போன்று வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விஐபி கடிதங்கள் பரிந்துரையில் சாமி தரிசனம் செய்வதற்கும் ஜூன் 30-ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நாளில் 22 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக சாமி தரிசனம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் திருப்பாவாடை சேவையிலும் பக்தர்கள் கலந்து கொள்ள ஜூன் 30-ம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் வியாழக்கிழமைகளில் மட்டும் 2000 பக்தர்களை இலவசமாக சாமி தரிசனம் செய்ய வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.