
பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 19ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலையறிக்கையை தாக்கல் செய்கிறார். 20ம் தேதி 2024 -2025 நிதிண்டிற்கான முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 21 ஆம் தேதி முன்பண கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும்.
பிப்ரவரி 20ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கையும் 21 ஆம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது. கேள்வி பதில், அரசு தீர்மானங்களை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நேரலையாக காண்பிக்கப்படுகிறது. சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் காண்பிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். சட்டப்பேரவை நடவடிக்கையை முழுமையாக ஒளிபரப்ப வேண்டும் என்ற நோக்கில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.