தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு தற்போது மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டத்தின் விதிமுறை ஆனது மாற்றப்படுகிறது. இனி தேசிய பென்சன்  திட்ட கணக்கிலிருந்து 25 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை எடுக்க முடியாது. இந்த தொகையில் பணியாளர் மற்றும் முதலாளி ஆகிய இருவரின் பணமும் அடங்கும்.

முதலீட்டு காலத்தில் மூன்று முறை மட்டுமே கணக்கிலிருந்து பாதி அளவு பணத்தை திரும்ப பெற முடியும். மூன்று வருடத்திற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு வாங்குதல், மருத்துவ சிகிச்சை அல்லது ஏதேனும் அவசர செலவுக்காக தேசிய பென்சன் திட்ட கணக்கில் இருந்து 25% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.