மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. வரிகளைக் குறைக்கும் நோக்கத்தில் திட்டங்கள் இருக்கலாம். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள், வரி நிவாரண நடவடிக்கைகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 22-25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகன (EV) துறைக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல வகையான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.