விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து சென்ற 19-ம் தேதி வெளியான படம் பிச்சைக்காரன்-2. இந்த படத்தில் நாயகியாக காவ்யா நடித்திருந்தார். முதல் நாளிலிருந்து மக்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் பிச்சைக்காரன்-2 படம் வெளிவந்து 11 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிச்சைக்காரன் 2 இதுவரையிலும் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இனிமேல் வரும் நாட்களிலும் நல்ல வசூலை எட்டும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.