இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் அடிக்கடி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதன்படி டிசிபி வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பெடரல் வங்கி மற்றும் கோடக் வங்கி உள்ளிட்ட வங்கிகள் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. முதலில் டிசிபி வங்கி இரண்டு கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 8% வட்டி, மூத்த குடிமக்களுக்கு 8.60 சதவீதம் வட்டியை வழங்குகின்றது .

அடுத்ததாக பேங்க் ஆப் இந்தியா வங்கி இரண்டு கோடிக்கும் மேல் மற்றும் 10 கோடிக்கும் குறைவான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 46 முதல் 90 நாட்களுக்கு 5.25 சதவீதமும், 91 முதல் 179 நாட்கள் வரை 6 சதவீதமும், 180 முதல் 210 நாட்கள் வரை 6.25 சதவீதமும், 211 நாட்கள் வரை 6.50 சதவீதமும், ஒரு வருடத்திற்கு 7.25 சதவீதமும் வட்டியை வழங்குகின்றது. அதனைப் போலவே பெடரல் வங்கி 500 நாட்களுக்கு 7.50 சதவீதமும், 21 மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு 7.80 சதவீதமும் வழங்குகிறது. அடுத்து கோடக் வங்கி ஏழு நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 2.75% வட்டியில் இருந்து 7.25 சதவீதம் ஆகவும், மூத்த குடிமக்களுக்கான வட்டியை 3.35 சதவீதத்தில் இருந்து 7.80 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.