பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாக் ஷி அகர்வால். இவர் முதலில் சின்ன திரையில் நடித்த நிலையில் அதன் பின் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் காலா, விசுவாசம், ராஜா ராணி மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக் ஷி அகர்வால் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.