
நாடு முழுவதும் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் விதமாக பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தகுதியுள்ள விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு வருடத்திற்கு மூன்று தவணைகளாக வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற ஜூலை 22ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, PM கிசான் நிதி 6000 ரூபாய் முதல் 8000 ரூபாயாக அதிகரிக்க வேளாண் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.